சிந்தையில் தோன்றும் சிற்சில வரிகளை,

செம்மையாய் சேர்த்தெடுத்து சிறியதாய் தொகுத்துள்ளேன்!

பிடித்திருந்தால் படியுங்கள், பிறருக்கும் சொல்லுங்கள்!

கருத்துக்கள் தருவதானால் கைகுலுக்கி வரவேற்ப்பேன்!

Friday, March 7, 2014

மாநாட்டுப் பேரணி

மரண மார்கத்து மாநாட்டுப் பேரணியை
பிறந்த நாளன்றே பின்தொடத் தொடங்கிவிட்டோம்.

Thursday, June 27, 2013

காணாமல் போன என் மனது

மருதாணிக்  கைகளும்
மலர் போன்ற கண்களும்
மது  ஊரும் இதழ்களும்
மனம் கொண்டு போனதே.

Wednesday, June 26, 2013

அவளும் அழகும்

அவளை அழகென்று அழைப்பதை விட
அழகை அவளென்று அழைப்பதே சரி.

Wednesday, June 19, 2013

ஏழு நாள் குழந்தை

என் மகள் கண்களில் ஏழு நாள் குழந்தையாய்
      என்னை நான் பார்க்கிறேன்! என்னை நான் பார்க்கிறேன்!
ஒன்றென இருந்த எம் இருவருக் இடையிலே
      ஒன்றிட வந்தவள் உள்ளத்தால் பார்க்கிறேன்!
பிஞ்(சு) அவள் கைகளில் கைகளைக் கோர்க்கையில்
      பஞ்செனப் பறக்கிறேன், பாரங்கள் மறக்கிறேன்!
இன்றெனக்(கு) இருந்திடும் எண்ணங்கள் யாவையும்,
      ஈர்த்திட வந்தவள், சுவாசிக்க மறக்கிறேன்!

Thursday, March 21, 2013

காரணமில்லா காதல்

காரணங்களைக் கடந்த கவர்ச்சி தான் காதல்
கண்டதும் கொண்டிடும் காதலே சாட்சி!

Friday, June 1, 2012

மாற்றம்

சலசலப்பை சந்கீதமாக்கும் அவள் சலங்கை!
சுவாசத்தை ஸ்வாரஸ்யமாக்கும் அவள் ஸ்பரிசம்!

Friday, May 11, 2012

நான் + நீ = நாம்
நானென்றால் நானல்ல நீயென்று நீ சொன்னாய்!
நீயென்றால் உன்னோடு நானென்று நீ சொன்னாய்!
நான் நீயாய், நீ நானாய், நாமென்றால் யாதென்றேன்.
நான் உனக்கும், நீ எனக்கும் நாமென்று நீ சொன்னாய்!