கடுகடுப்பாய் சில நொடிகள்,
காய்ந்து போகும் சில நொடிகள்,
கற்பனைகள் களவாடும், காட்சிகளில் சிலநொடிகள்,
கடிந்துகொண்ட சிலநொடிகள்,
வெடிந்துரைந்த சிலநொடிகள்,
வாழ்க்கையே வீணென, வெறித்து நின்ற சிலநொடிகள்,
வேதனைகள் ஒன்றுமில்லை. வீழ்சிகள் ஏதுமில்லை.
காரணம் தோன்றவில்லை. கண்களில் ஏன் சாரல் மழை!