மலையும் முகிலும்
மகிழ்ந்து தழுவும்
மகத்தான ஊர் இது!
பலநூறு பச்சைத் தலையனையை
பக்கபக்கமாய் அடுக்கிவைத்து,
பனிப்போர்வை போர்த்தியது யார்?
பரவசித்து நான் நின்றேன்.
பாம்புவழிப் பாதைகளில் பதைபதைப்பும்,
பூந்தோட்டச் சோலைகளில் சலசலப்பும்,
பனிசூழ்ந்த பாறைகளில் கிளுகிளுப்பும்!
பரிவார யானைகளின் அணிவகுப்பும்!
கல்லூரிக் குமரிகளின்
கண்கவரும் அணிவகுப்பில்,
கண்சிமிட்ட நான் மறந்தேன்!
எதிரொலிக்கும்(Echo Point) பாறைகளில்
எதை ஒலித்தும் திரும்பவில்லை!
என்னவளின் பெயர் நினைதேன்,
எண்திசையும் சாரல் மழை!
மலை நாட்டுத் தெருக்களிலே
மழை பொழிந்தால் என்னாகும்?
மலையோடும், மரத்தோடும்,
மகிழ்ந்தாடும் மலரோடும்,
மனதோடும் நாம் நனைவோம்!!
No comments:
Post a Comment