Tuesday, December 20, 2011

பொய்




குறிஞ்சியாய் பூத்த
       என் நெஞ்சத்து சோலையிலே
நெருஞ்சியாய் குத்துதடி
        நீ சொன்ன சிறு பொய்!

Friday, December 16, 2011

பொய்யாகும் உண்மைகள்

புவி ஈர்ப்பு விசை யாவும்
பொய்யாகிப் போனதடி!
பெண்ணே நான் உன் நினைவில்
பறக்கின்ற அந்த நொடி! 

Wednesday, December 14, 2011

மழை

கடுமழைக்கு பயந்து
கார்மேகக் கருங்குடையுள்
மறைந்தாயோ வெண்ணிலவே?

அந்நிலவைக் காண
வின் நீங்கிச் சென்றீரோ வின்மீங்காள்!

Friday, November 18, 2011

திருமணம்



நான் வந்து உன்னோடு நீயாகும் அந்நாளில்,
நீ வந்து என்னோடு நாமாவோம், அதன் பின்னே,
நீயென்றும் நானென்றும் ஏதங்கே? மேகத்தின்
காற்றோடு நீராக நாம் சேர்வோம்.

Friday, November 4, 2011

கற்பனைக் காதல்

கற்பனையில் கண்பார்த்து, 
கற்பனையில் கதை பேசி, 
கற்பனையில் காதலித்தேன்!
அக் காதலிலும் தோல்வியுற்றேன்!


காதல் கற்பனைதான்.
காதல் தோல்வியும் கற்பனைதான்! 

கவியழகே,
(என்) கண்ணீர் மட்டும் நிஜம்.

Monday, October 31, 2011

குவியம்

என் நினைவுகள் யாவும் ஓர் இடத்தினில் குவியுமாயின்,
அது உன்னிடம் மட்டுமே தோழி!
 

நீ - நான்

நான் நானாக இல்லை, 
நீ நீயாக இருப்பதனால்! 


Thursday, October 27, 2011

முதல் நடை

கண்ணுக்கு மை இட்டு, 
கை பிடித்து நடை பழக்க,
கைவிட்டு (நீ) நடந்த நொடி,
மெய் சிலிர்த்து பூரித்தோம்!!!

Tuesday, October 18, 2011

சிதைக்கின்றால் நெஞ்சமதை

ஒரு பக்க முகம் பார்த்து
உருக்குலைந்து நான் போனேன்.
மறுபக்கம் கண்டுருக,
மறுஜென்மம் வேண்டுமென்பேன்.
சிறுதுக்கம் சிரித்துளவும்
சின்னதிறு செவ்விழியால்,
சிதைக்கின்றால் சிதைக்கின்றால்
சீறியெழும் நெஞ்சமதை!

கதிர்வதனக் கன்னிமகள்

கதிர்வதனக் கன்னிமகள்
கனியிதழைக் கனவதனில்
நுனிவிரலால் நுகர்ந்துருகி
பிணி விலகல் நான் பெற்றேன்!

Thursday, October 13, 2011

பெண்ணொருத்தி வேண்டும்

விரலிடுக்கில் விரல் நுழைத்து
  மிகப்பதமாய் சொடுக்கெடுக்க,
சொக்கிநின்ற நொடிப்பொழுதில்
   கைகோர்த்து வலைத்திழுக்க,
தோள்மீது முகம்புதைத்து
   சுவாசத்தால் முத்தமிட,
தலை சாயும் நேரத்தில்
   தாயாகி அரவணைக்க!
 

முதல் முத்தம்

அதரத்தில் அவளுக்கு நானிட்ட முதல் முத்தம்,
அணுத் திசுக்கள் அனைத்தினிலும் அரை நிமிட பூகம்பம்!
 


Friday, October 7, 2011

தீபம்

தீபத்தை கண்டு வணங்கி தெய்வீகம் உணர்கின்றோம்
திரிக்கு மட்டுமே தெரியும் அதன் எரிக்கும் குணம்.

Saturday, September 24, 2011

நீ பிரிந்தால்,

எனை நீங்கி உன்னோடு செல்பவைகள் சிலவற்றை,
சிந்தித்து சொல்கின்றேன் சிலநொடிகள் கேட்டுச்செல்.

தெளிவான இசை ஆர்வம், தித்திக்கும் சுவை நாட்டம்,
கனிவான சொல்லாண்மை, செல்வழியில் தவறாமை,

இவையோடு என்மனதின் இனிதான நினைவுகளும்,
அவையோடு துணையாக கனவுகளும் கற்பனையும்,

நிறையோடு முகம்சூழ்ந்த நகைச்சுவையும் புன்னகையும்,
தனியான என்னுடலில் தவித்தாடும் உயிருணர்வும் !!



Wednesday, April 20, 2011

?

பளிச்சென்று ஒரு வெளிச்சம்.
மின்னலென நான் நினைதேன்,
அது அவள் கண்கள்.

சில்லென ஒரு குளிர்ச்சி.
தென்றலென நினைதேன்,
அது அவள் வாசம்.

திக்கெட்டும் தெறிக்கும் தித்திக்கும் தேன்துளிகள்.
சாரல் மழையென நினைதேன்,
அவை அவள் கொஞ்சும் மொழிச் சொற்கள்.

சிந்தை பறிபோன சிற்சில நிமிடங்கள்.
காதலென நினைதேன்.
அது ________________

கண்மணியே




என் இடக்கண்ணைத் தா என்றாய்.
எடுத்துக்கொள் எனத் தந்தேன்.


வலக்கண்ணும் வேண்டுமென்றாய்.
வாங்கிக்கொள் எனத் தந்தேன்.


இன்னொரு கண் வேண்டுமென்றாய்.
என் செய்வேன் என்னுயிரே!



 

Tuesday, April 5, 2011

நிலவு

நிலவுக்கு கண்ணும் மூக்கும் 
இதழோடு சேர்ந்திருந்தால் 
நிஜமாகச் சொல்வேன் பெண்ணே 
நீயென்று நினைத்திருப்பேன்!

Monday, March 14, 2011

தாய் நாட்டுப் பற்று

மட்டைப் பந்து மைதானத்தில் மட்டுமே 

வெளிப்படும் தாய் நாட்டுப் பற்று


கண்களைச் சற்றே கலங்கச் செய்கிறது!

Tuesday, February 8, 2011

பொய்யாகிப் போனேன் நான்

நிலை குலைந்த நிலையினிலும்
நினைவை ஈர்த்திழுக்கும்
நிஜம் நீ பெண்ணே!
பொய்யாகிப் போனேன் நான்!

பைத்தியமாய் திரிகின்றேன்

மந்திரப் புன்னகையால்
மனதை மதிமயக்கும்
மாயமென்ன செய்தாய் பெண்ணே?
மாறுதல்கள் நான் கண்டேன்.
மழைத்துளியை முத்தமிட்டேன்.
நள்ளிரவில் பகல் கண்டேன்.
பகல் பொழுதில் பரவசித்தேன்.
பைத்தியமாய் சிரித்திருந்தேன் நீ இருந்த அப்போது.
பைத்தியமாய் திரிகின்றேன் நீ பிரிந்த இப்போது.

Monday, January 10, 2011

நொடி

நிலநடுக்கம் நெஞ்சினிலே நிலைகொண்ட அந்த நொடி
பதைபதைக்கும் புயலோடு மனம் சீற்றம் கொண்ட நொடி
இடி விழுந்து என் நெஞ்சை பொடிப் பொடியாய் செய்த நொடி
கொடியழகே எனை நீங்கி நீ சென்ற அந்த நொடி.