பளிச்சென்று ஒரு வெளிச்சம்.
மின்னலென நான் நினைதேன்,
அது அவள் கண்கள்.
சில்லென ஒரு குளிர்ச்சி.
தென்றலென நினைதேன்,
அது அவள் வாசம்.
திக்கெட்டும் தெறிக்கும் தித்திக்கும் தேன்துளிகள்.
சாரல் மழையென நினைதேன்,
அவை அவள் கொஞ்சும் மொழிச் சொற்கள்.
சிந்தை பறிபோன சிற்சில நிமிடங்கள்.
காதலென நினைதேன்.
அது ________________