Monday, October 31, 2011

குவியம்

என் நினைவுகள் யாவும் ஓர் இடத்தினில் குவியுமாயின்,
அது உன்னிடம் மட்டுமே தோழி!
 

நீ - நான்

நான் நானாக இல்லை, 
நீ நீயாக இருப்பதனால்! 


Thursday, October 27, 2011

முதல் நடை

கண்ணுக்கு மை இட்டு, 
கை பிடித்து நடை பழக்க,
கைவிட்டு (நீ) நடந்த நொடி,
மெய் சிலிர்த்து பூரித்தோம்!!!

Tuesday, October 18, 2011

சிதைக்கின்றால் நெஞ்சமதை

ஒரு பக்க முகம் பார்த்து
உருக்குலைந்து நான் போனேன்.
மறுபக்கம் கண்டுருக,
மறுஜென்மம் வேண்டுமென்பேன்.
சிறுதுக்கம் சிரித்துளவும்
சின்னதிறு செவ்விழியால்,
சிதைக்கின்றால் சிதைக்கின்றால்
சீறியெழும் நெஞ்சமதை!

கதிர்வதனக் கன்னிமகள்

கதிர்வதனக் கன்னிமகள்
கனியிதழைக் கனவதனில்
நுனிவிரலால் நுகர்ந்துருகி
பிணி விலகல் நான் பெற்றேன்!

Thursday, October 13, 2011

பெண்ணொருத்தி வேண்டும்

விரலிடுக்கில் விரல் நுழைத்து
  மிகப்பதமாய் சொடுக்கெடுக்க,
சொக்கிநின்ற நொடிப்பொழுதில்
   கைகோர்த்து வலைத்திழுக்க,
தோள்மீது முகம்புதைத்து
   சுவாசத்தால் முத்தமிட,
தலை சாயும் நேரத்தில்
   தாயாகி அரவணைக்க!
 

முதல் முத்தம்

அதரத்தில் அவளுக்கு நானிட்ட முதல் முத்தம்,
அணுத் திசுக்கள் அனைத்தினிலும் அரை நிமிட பூகம்பம்!
 


Friday, October 7, 2011

தீபம்

தீபத்தை கண்டு வணங்கி தெய்வீகம் உணர்கின்றோம்
திரிக்கு மட்டுமே தெரியும் அதன் எரிக்கும் குணம்.