Friday, February 17, 2012

எங்கும் நீ

நதி நீரில் கை நனைக்க,
    நீர்த் துளியில் நீ இருந்தாய். நதி சேர்ந்த, 
கடல் நீரில் கால் நனைத்தேன்,
    கரை மணலில் நீ இருந்தாய். மணல் அருகே,
தென்னை மரத்(து) இளநீரின்,
    தண்மையென நீ இருந்தாய். மரத்தடியில்,
மலர்ந்திருந்த மல்லிகையின்,
    மென்மையென நீ இருந்தாய்!

Wednesday, February 8, 2012

நம் திருமணத்தில்

வங்கக் கடலும் அரபிக் கடலும்
வாழ்த்துரைக்க சங்கமிக்கும்.

ஜூஹு கடற்கரையில்
மெரினாவின் மணல் பரவும்.

முத்தமிழோடு மராட்டியும் சேரும்.

ஊத்தாப்பமும் உளுந்துவடையும்,
பாவ்-பாஜிக்கு  கை குலுக்கும்.

தாண்டியா ஆட்டங்களில்
பரதத்தின் அபிநயங்கள்.

 அன்பே நம் திருமணத்தில்,
திசை எட்டும் ஒன்றினையும்!

Monday, February 6, 2012

ஏதேதோ

ஏதேதோ நாம் நினைத்தோம்,
ஏதேதோ நடக்கிறது.
ஏன் என்ற கேள்விக்கு,
எவரிடமும் பதிலில்லை.