Saturday, September 24, 2011

நீ பிரிந்தால்,

எனை நீங்கி உன்னோடு செல்பவைகள் சிலவற்றை,
சிந்தித்து சொல்கின்றேன் சிலநொடிகள் கேட்டுச்செல்.

தெளிவான இசை ஆர்வம், தித்திக்கும் சுவை நாட்டம்,
கனிவான சொல்லாண்மை, செல்வழியில் தவறாமை,

இவையோடு என்மனதின் இனிதான நினைவுகளும்,
அவையோடு துணையாக கனவுகளும் கற்பனையும்,

நிறையோடு முகம்சூழ்ந்த நகைச்சுவையும் புன்னகையும்,
தனியான என்னுடலில் தவித்தாடும் உயிருணர்வும் !!



Wednesday, April 20, 2011

?

பளிச்சென்று ஒரு வெளிச்சம்.
மின்னலென நான் நினைதேன்,
அது அவள் கண்கள்.

சில்லென ஒரு குளிர்ச்சி.
தென்றலென நினைதேன்,
அது அவள் வாசம்.

திக்கெட்டும் தெறிக்கும் தித்திக்கும் தேன்துளிகள்.
சாரல் மழையென நினைதேன்,
அவை அவள் கொஞ்சும் மொழிச் சொற்கள்.

சிந்தை பறிபோன சிற்சில நிமிடங்கள்.
காதலென நினைதேன்.
அது ________________

கண்மணியே




என் இடக்கண்ணைத் தா என்றாய்.
எடுத்துக்கொள் எனத் தந்தேன்.


வலக்கண்ணும் வேண்டுமென்றாய்.
வாங்கிக்கொள் எனத் தந்தேன்.


இன்னொரு கண் வேண்டுமென்றாய்.
என் செய்வேன் என்னுயிரே!



 

Tuesday, April 5, 2011

நிலவு

நிலவுக்கு கண்ணும் மூக்கும் 
இதழோடு சேர்ந்திருந்தால் 
நிஜமாகச் சொல்வேன் பெண்ணே 
நீயென்று நினைத்திருப்பேன்!

Monday, March 14, 2011

தாய் நாட்டுப் பற்று

மட்டைப் பந்து மைதானத்தில் மட்டுமே 

வெளிப்படும் தாய் நாட்டுப் பற்று


கண்களைச் சற்றே கலங்கச் செய்கிறது!

Tuesday, February 8, 2011

பொய்யாகிப் போனேன் நான்

நிலை குலைந்த நிலையினிலும்
நினைவை ஈர்த்திழுக்கும்
நிஜம் நீ பெண்ணே!
பொய்யாகிப் போனேன் நான்!

பைத்தியமாய் திரிகின்றேன்

மந்திரப் புன்னகையால்
மனதை மதிமயக்கும்
மாயமென்ன செய்தாய் பெண்ணே?
மாறுதல்கள் நான் கண்டேன்.
மழைத்துளியை முத்தமிட்டேன்.
நள்ளிரவில் பகல் கண்டேன்.
பகல் பொழுதில் பரவசித்தேன்.
பைத்தியமாய் சிரித்திருந்தேன் நீ இருந்த அப்போது.
பைத்தியமாய் திரிகின்றேன் நீ பிரிந்த இப்போது.