Thursday, October 27, 2011

முதல் நடை

கண்ணுக்கு மை இட்டு, 
கை பிடித்து நடை பழக்க,
கைவிட்டு (நீ) நடந்த நொடி,
மெய் சிலிர்த்து பூரித்தோம்!!!

Tuesday, October 18, 2011

சிதைக்கின்றால் நெஞ்சமதை

ஒரு பக்க முகம் பார்த்து
உருக்குலைந்து நான் போனேன்.
மறுபக்கம் கண்டுருக,
மறுஜென்மம் வேண்டுமென்பேன்.
சிறுதுக்கம் சிரித்துளவும்
சின்னதிறு செவ்விழியால்,
சிதைக்கின்றால் சிதைக்கின்றால்
சீறியெழும் நெஞ்சமதை!

கதிர்வதனக் கன்னிமகள்

கதிர்வதனக் கன்னிமகள்
கனியிதழைக் கனவதனில்
நுனிவிரலால் நுகர்ந்துருகி
பிணி விலகல் நான் பெற்றேன்!

Thursday, October 13, 2011

பெண்ணொருத்தி வேண்டும்

விரலிடுக்கில் விரல் நுழைத்து
  மிகப்பதமாய் சொடுக்கெடுக்க,
சொக்கிநின்ற நொடிப்பொழுதில்
   கைகோர்த்து வலைத்திழுக்க,
தோள்மீது முகம்புதைத்து
   சுவாசத்தால் முத்தமிட,
தலை சாயும் நேரத்தில்
   தாயாகி அரவணைக்க!
 

முதல் முத்தம்

அதரத்தில் அவளுக்கு நானிட்ட முதல் முத்தம்,
அணுத் திசுக்கள் அனைத்தினிலும் அரை நிமிட பூகம்பம்!
 


Friday, October 7, 2011

தீபம்

தீபத்தை கண்டு வணங்கி தெய்வீகம் உணர்கின்றோம்
திரிக்கு மட்டுமே தெரியும் அதன் எரிக்கும் குணம்.

Saturday, September 24, 2011

நீ பிரிந்தால்,

எனை நீங்கி உன்னோடு செல்பவைகள் சிலவற்றை,
சிந்தித்து சொல்கின்றேன் சிலநொடிகள் கேட்டுச்செல்.

தெளிவான இசை ஆர்வம், தித்திக்கும் சுவை நாட்டம்,
கனிவான சொல்லாண்மை, செல்வழியில் தவறாமை,

இவையோடு என்மனதின் இனிதான நினைவுகளும்,
அவையோடு துணையாக கனவுகளும் கற்பனையும்,

நிறையோடு முகம்சூழ்ந்த நகைச்சுவையும் புன்னகையும்,
தனியான என்னுடலில் தவித்தாடும் உயிருணர்வும் !!