Friday, January 27, 2012

காட்டு மனிதா!

பாடல் என்பது வரிகளை மறந்து,
     இசைமட்டும் என்றாகிவிட்டது!
அர்த்தமற்ற அசைவுகளே
     நடனத்தின் நிலையாகிவிட்டது!
பாட்டெழுதி இசையமைத்த காலம் மாறி,
    பிதற்றுவதெல்லாம் பாட்டாய்க் கருதும் மக்கள்.
இனி கவிதை தேவை இல்லை.
    கவிஞர்கள் தேவை இல்லை.

அட காட்டு மனிதா,
காடுகளில்  நீ மீண்டும் வாழ்வது,
     கண்களில் தெரியுதடா!

கேரளம்

 இயற்க்கை நமக்கிழைத்த
பச்சைத் துரோகம்,----
'கேரளம்'.

(இது கேரளத்தின் பசுமை வளத்தை சிறப்பித்து கூறுவதற்கு மட்டுமே. இதன்மூலம் யார் மனதும் புண்படுமாயின், மன்னிக்கவும்.)

Tuesday, January 10, 2012

முன்பொரு ஜென்மத்தில்

May மாதம் நான் பிறந்தேன்
June மாதம் அவள் பிறந்தால்
July யிலே மணம் புணர்ந்து, 
Augustல் மகவீன்றோம்!

Septemberல் சேமித்து,
Octoberல் வீடு கட்டி,
Novemberல் குடி புகுந்தோம்.
Decemberல் குளிர் காய்ந்தோம்!

January பிறப்பெடுக்க,
ஜேஷ்ட மகன் (Eldest son) மணம் முடித்தோம்.
February பேரனுக்கு
பிடித்ததெல்லாம் வாங்கித் தந்தோம்.

Marchல் அவள் மரணித்தால்.
மரத் தூணாய் தனித்து நின்றேன். 
April வரை காத்திருந்தேன்,
எமன் என்னை எடுத்துச் செல்ல!

மீண்டும் அந்த Mayம், Juneம்,
இன்று காத்திருக்கின்றன.

ஒரு  Julyக்காக!

Wednesday, January 4, 2012

இமைகள்

பொதுவாய் கண் மூடும்போது மேல் இமை கீழிறங்கி கீழ் இமையை முத்தமிடும்!
உறங்கும்போது மட்டுமே, கீழ் இமை மேலே சென்று மேல் இமையை தழுவிக்கொள்ளும்!
அன்பே நான் உன்னைக் கண்டு மெய்மறக்கும் நொடிப் பொழுதில்,
இமையிரண்டும் இனைந்து வந்து இதமாக இனிய இசை பாடுதடி!