Tuesday, December 28, 2010

பெயர்

உன்
பெயர்
மட்டும்
போதுமடி
உயிரோடு
நான்
வாழ!

Friday, December 24, 2010

இது கம்ப்யூட்டர் காதற்க்காலம்

இது கம்ப்யூட்டர் காதற்க்காலம்
கனநேரம் வரையே நீளும்.
கண்ணோடு கண்கள் கண்டால்
காதலாய் கலந்து பேசி
நெட்டினில் கதை அடிப்பர்.
கட்டிலில் கதை முடிப்பர்.





சிந்தையை சிதைக்கும் காதல்

அன்றொருநாள் உன்னுடன் நான்
அனுபவித்த இன்பமெல்லாம்
கண்ணிரண்டில் கண்ணீராய்
கண்ணமெங்கும் பாயுதடி.

காதருகே கவின் மொழியாய்
நீ உரைத்த சொர்ற்க்கள் எல்லாம்
நெஞ்சகத்தின் சுவர்களிலே 
நித்தம் எதிரோலிக்குதடி.


நடுநிசியில் நரம்புகளின்
நடுவினிலே பிறக்குமொரு
நடுக்கத்தை நினைத்துருக 
புஜங்கள் பல வேண்டுமடி!


இன்னம் ஒரு நொடி கூட
உயிர் வாழத் தோன்றவில்லை.
இறந்தபின்னும் வலிதொடரும்
என்ற பயம் துரத்துதடி!

Thursday, November 18, 2010

என் காதலிக்கு கல்யாணம்

என் காதலிக்கு கல்யாணம், கண்ணாலன் நான் இல்லை.


நினைவுகளில் நீரலைகள், நித்திரையில் நெருப்பலைகள்.
கண்ணெதிரே பூக்கோலம், நெஞ்சருகே போர்க்காலம்.


என்
நெஞ்சகதுச் சோலையிலே பூத்தொளித்த மல்லிகைப்பூ,
பஞ்சகத்தை தேடியதும் பூஞ்சோலை வாடியது. 


உள்நெஞ்சம் கதறுதடி, உதிரமெல்லாம் கருகுதடி. 


உன் 
மணவறையில் அக்னிகுண்டம் அணையும் ஒரு தருணத்தில்,
பிணவறையில் என் உடம்பு கரியாகிக் கிடக்குமடி.




என் காதலிக்கு கல்யாணம்.




கண்ணாலன்.






நான் இல்லை.

Thursday, October 14, 2010

கலக்கம்

கடுகடுப்பாய் சில நொடிகள்,
காய்ந்து போகும் சில நொடிகள்,
கற்பனைகள் களவாடும், காட்சிகளில் சிலநொடிகள்,
கடிந்துகொண்ட சிலநொடிகள்,
வெடிந்துரைந்த சிலநொடிகள்,
வாழ்க்கையே வீணென, வெறித்து நின்ற சிலநொடிகள்,
வேதனைகள் ஒன்றுமில்லை. வீழ்சிகள் ஏதுமில்லை.
காரணம் தோன்றவில்லை. கண்களில் ஏன் சாரல் மழை!

Thursday, September 30, 2010

என்னைக் காணவில்லை

கண்களில் நீ
கருத்தினில் நீ
சிந்தையில் நீ
சிரிப்பினில் நீ
சொந்தமும் நீ
சொர்க்கமும் நீ

சொல்லடி பெண்ணே,
நான் இங்கு எங்கே?

Wednesday, September 29, 2010

திட்டமிடும் விழிக்கணைகள்

காவியமோ, ஓவியமோ,
கண்ணகியின் கார்ச்சிலம்போ,
பாற்குடமோ, போர்க்கலமோ,
பேரழகுப் பெட்டகமோ?
வட்டமிடும் விழிக்கணைகள்
திட்டமிட்டுக் கொல்லுதடி!

Tuesday, September 28, 2010

உன் சிரிப்பினில்

நெருப்பு மட்டுமல்ல,
சிரிப்பும் சுடுமென உணர்ந்தேன்.
பேய்ப்பெண்ணே, நீ என்னைப் பிரிந்தபின்!

உம்

'உம்'மென்று சொல்லடி.
உள்நெஞ்சை உதறிக் கொடுத்துவிட்டு,
உயிர் மாய்த்துக்கொள்வேன் நான்! 

Saturday, September 25, 2010

உயிரோடு உயிராக

உயிர் போகும் தருணத்தில்
உன்னோடு நானிருந்தால்
விண்ணோடு செல்லாமல்
உன் விழியோடு உறைந்திடுவேன்!

சர்க்கரைப் பெண்

சர்க்கரைப் பெண்ணே,

உன்மீது எறும்புகள் மொய்க்காததும்
அதிசயம்தான் !