Friday, June 1, 2012

மாற்றம்

சலசலப்பை சந்கீதமாக்கும் அவள் சலங்கை!
சுவாசத்தை ஸ்வாரஸ்யமாக்கும் அவள் ஸ்பரிசம்!

Friday, May 11, 2012

நான் + நீ = நாம்




நானென்றால் நானல்ல நீயென்று நீ சொன்னாய்!
நீயென்றால் உன்னோடு நானென்று நீ சொன்னாய்!
நான் நீயாய், நீ நானாய், நாமென்றால் யாதென்றேன்.
நான் உனக்கும், நீ எனக்கும் நாமென்று நீ சொன்னாய்!

Monday, April 23, 2012

நிஜம்


நிலவில்லா வான்
சுவையில்லா தேன்
செவிளில்லா மீன்
நீயில்லா நான்!

Monday, April 2, 2012

facebook & google

தோழன் ஒருவன் துணை இருந்தால்,
      google தேவையில்லை!

தோழி ஒருத்தி உடன் இருந்தால்,
      facebook தேவையில்லை!

Thursday, March 29, 2012

வாழ்க்கையில்

நினைவுகளை சேமிக்கிறேன்,
  கனவுகளில் செலவழிக்க!
 

Tuesday, March 27, 2012

உன் மருதாணிக் கை விரலில்

உன் மருதாணிக் கை விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டு,
மனதார முத்தமிட மனம் கிடந்து துடிக்குதடி.


இடம் மாறிய இதயம்

இவள் வந்து
  என் நெஞ்சில்
இடம் பெயர்வால்
  என்றறிந்து, 
 
இடம்கொடுக்க
  இதயத்தை
இடப்பக்கம்
  நகர்த்திவைத்தான்!


[Knowing that, she will come and migrate/shift to my chest
to giver her some place. Nature had moved my heart a little left.]

Friday, March 23, 2012

காகித மலர்கள்

அவள் கண்களிரண்டும்
    காகித மலர்கள்!
காய்ந்து கிடந்தாலும்,
     வாடி இருப்பதில்லை!


[காய்ந்து கிடந்தாலும் - ஏங்கி நிற்கும் என் மீது இறக்கம் கொள்ளாமல்]

Wednesday, March 21, 2012

உன் பொங்கல் பறிபோனால்?

வேறொருவன் வேதனையில்
        வெண்பொங்கல் சமைதுண்டால்,
யார் வருவார் உன் பின்னே,
        உன் பொங்கல் பறிபோனால்?

என் தோழா, எழுந்து வா!

நல்லவராய் வாழ்தல் இழிவென்று  எண்ணும் 
நாகரீக இவ்வுலகில்,
வல்லவன் வகுக்கும் வக்கற்ற விதிகளெல்லாம்
வள்ளுவமாய் வாசலெங்கும்!

ஏனென்ற கேள்வி எவரிடமும் இங்கில்லை,
தானென்ற வாழ்க்கையிலே தலை மூழ்கிய தயாளர்கள்!

எலும்பிட்டால் வாலாட்டும் நாய்கட்கும் நம்மவர்க்கும்
ஏதிங்கே வித்யாசம், என் தோழா, எழுந்து வா!

Tuesday, March 13, 2012

கண்ணீர் - உதிரம்

கண்கள் வடித்த கண்ணீர்,
கரையின்றி காய்ந்துவிட்டது கண்ணத்தில்.
உள்ளம் உதிர்த்த உதிரம்,
குமுருதடி பெண்ணே,
கரையாக அல்ல, கடல் அலையாக!

Thursday, March 1, 2012

முத்த சத்தம்

முத்தத்தை வாங்கிக்கொண்டு,
சத்தத்தை மட்டும் கொணர்ந்தது
என் அலைபேசி.

முத்த சத்தத்தில்
ஓராயிரம் யுத்தங்கள்.

மொத்த முத்தத்தில், .........

Friday, February 17, 2012

எங்கும் நீ

நதி நீரில் கை நனைக்க,
    நீர்த் துளியில் நீ இருந்தாய். நதி சேர்ந்த, 
கடல் நீரில் கால் நனைத்தேன்,
    கரை மணலில் நீ இருந்தாய். மணல் அருகே,
தென்னை மரத்(து) இளநீரின்,
    தண்மையென நீ இருந்தாய். மரத்தடியில்,
மலர்ந்திருந்த மல்லிகையின்,
    மென்மையென நீ இருந்தாய்!

Wednesday, February 8, 2012

நம் திருமணத்தில்

வங்கக் கடலும் அரபிக் கடலும்
வாழ்த்துரைக்க சங்கமிக்கும்.

ஜூஹு கடற்கரையில்
மெரினாவின் மணல் பரவும்.

முத்தமிழோடு மராட்டியும் சேரும்.

ஊத்தாப்பமும் உளுந்துவடையும்,
பாவ்-பாஜிக்கு  கை குலுக்கும்.

தாண்டியா ஆட்டங்களில்
பரதத்தின் அபிநயங்கள்.

 அன்பே நம் திருமணத்தில்,
திசை எட்டும் ஒன்றினையும்!

Monday, February 6, 2012

ஏதேதோ

ஏதேதோ நாம் நினைத்தோம்,
ஏதேதோ நடக்கிறது.
ஏன் என்ற கேள்விக்கு,
எவரிடமும் பதிலில்லை.

Friday, January 27, 2012

காட்டு மனிதா!

பாடல் என்பது வரிகளை மறந்து,
     இசைமட்டும் என்றாகிவிட்டது!
அர்த்தமற்ற அசைவுகளே
     நடனத்தின் நிலையாகிவிட்டது!
பாட்டெழுதி இசையமைத்த காலம் மாறி,
    பிதற்றுவதெல்லாம் பாட்டாய்க் கருதும் மக்கள்.
இனி கவிதை தேவை இல்லை.
    கவிஞர்கள் தேவை இல்லை.

அட காட்டு மனிதா,
காடுகளில்  நீ மீண்டும் வாழ்வது,
     கண்களில் தெரியுதடா!

கேரளம்

 இயற்க்கை நமக்கிழைத்த
பச்சைத் துரோகம்,----
'கேரளம்'.

(இது கேரளத்தின் பசுமை வளத்தை சிறப்பித்து கூறுவதற்கு மட்டுமே. இதன்மூலம் யார் மனதும் புண்படுமாயின், மன்னிக்கவும்.)

Tuesday, January 10, 2012

முன்பொரு ஜென்மத்தில்

May மாதம் நான் பிறந்தேன்
June மாதம் அவள் பிறந்தால்
July யிலே மணம் புணர்ந்து, 
Augustல் மகவீன்றோம்!

Septemberல் சேமித்து,
Octoberல் வீடு கட்டி,
Novemberல் குடி புகுந்தோம்.
Decemberல் குளிர் காய்ந்தோம்!

January பிறப்பெடுக்க,
ஜேஷ்ட மகன் (Eldest son) மணம் முடித்தோம்.
February பேரனுக்கு
பிடித்ததெல்லாம் வாங்கித் தந்தோம்.

Marchல் அவள் மரணித்தால்.
மரத் தூணாய் தனித்து நின்றேன். 
April வரை காத்திருந்தேன்,
எமன் என்னை எடுத்துச் செல்ல!

மீண்டும் அந்த Mayம், Juneம்,
இன்று காத்திருக்கின்றன.

ஒரு  Julyக்காக!

Wednesday, January 4, 2012

இமைகள்

பொதுவாய் கண் மூடும்போது மேல் இமை கீழிறங்கி கீழ் இமையை முத்தமிடும்!
உறங்கும்போது மட்டுமே, கீழ் இமை மேலே சென்று மேல் இமையை தழுவிக்கொள்ளும்!
அன்பே நான் உன்னைக் கண்டு மெய்மறக்கும் நொடிப் பொழுதில்,
இமையிரண்டும் இனைந்து வந்து இதமாக இனிய இசை பாடுதடி!